மோடி பதவியேற்பு விழா : இந்தியா கூட்டணிக்கு அழைப்பு இல்லை..!!
No Proper Invite To INDIA Alliance For Modis Swearing in Ceremony
பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க உள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைத்ததையடுத்து பிரதமர் மோடி நேற்று மாலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிரதமர் மோடியிடம் ஆட்சியமைப்பதற்கான அதிகாரப்பூர்வமான கடிதத்தை வழங்கினார். இதையடுத்து மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா நாளை ஜூன் 9ம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற உள்ளது.
மேலும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் முறையான, அதிகாரப்பூர்வமான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை உள்ளிட்ட பல உலக நாடுகளின் பங்கேற்பும் உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸின் இந்தியா கூட்டணிக்கு பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது, "மோடியின் பதவியேற்பு விழாவிற்கு எங்கள் இந்தியா கூட்டணிக்கு இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. உலக நாடுகளின் தலைவர்களுக்கு மட்டும் தான் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. எங்களுக்கு அழைப்பு வந்தால் அப்போது விழாவில் கலந்து கொள்வது குறித்து முடிவு எடுப்போம்" என்று கூறினார்.
English Summary
No Proper Invite To INDIA Alliance For Modis Swearing in Ceremony