பாஜகவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டு கூட விழக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்!!
Not a single vote should fall in favor of BJP Arvind Kejriwal
பாஜகவிற்கு ஒரு ஓட்டு கூட விழக்கூடாது பஞ்சாப் லூதியானாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கடந்துகொண்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாக பேசியுள்ளார்.
இந்தியாவில் ஆறு கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த உள்ள நிலையில், ஏழாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. ஜூன் ஒன்றாம் தேதியுடன் மக்களவைத் தேர்தல் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் நான்காம் தேதி மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், நான் உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். மத்தியில் நாம் பலவீனமாக உள்ளோம். மத்தில் ஆட்சி அமைந்தால் நமது கைகள் வலுவடையும்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 4க்கு பிறகு பஞ்சாப் அரசு ஒழிக்கப்படும்.பகவந்த் மான் பதவி விலகுவார். முதல்வரை பதவியில் இருந்து நீக்குவோம் என மிரட்டிவுள்ளார்.எனவே பாஜகக்கு ஆதரவாக ஒரு வாக்கு கூட விழக்கூடாது என கூறிவுள்ளார்.
English Summary
Not a single vote should fall in favor of BJP Arvind Kejriwal