கூடிக் குலாவி..வெட்கமின்றி செய்யும் திருமா... இதற்கெல்லாமா கூச்சப்பட போகிறார்? அட்டாக் மோடில் நாதக இடும்பாவனம்!
NTK and BJP reply to Thirumavalavan
திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றுதான், வேறு இல்லை என்று விசிக திருமாவளவன் பேசியதற்கு நாம் தமிழர் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஒருபுறம், தலைவர் பிரபாகரன் அவர்களைப் பேசிக் கொண்டே மறுபுறம் ராகுல் காந்தியோடு கூடிக் குலவுகிறார் அண்ணன் திருமாவளவன்.
ஈழ இன அழிப்பை தனது அதிகாரப் பலத்தைக் கொண்டு முன்னின்று நடத்திய கொடுங்கோல் காங்கிரசோடு கூட்டணி உறவு வைத்துக் கொண்டே, மாவீரர் நாள் நிகழ்விலும் பங்கேற்கிறார்.
அவ்வளவு பெரிய முரண்பாட்டையே நாணமின்றி செய்யும் அண்ணன் திருமா, தமிழ்த்தேசியமும், திராவிடமும் ஒன்றுதான் எனக் கூறுவதற்கா கூச்சப்படுவார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, திராவிடத்திற்கு புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், "திராவிடம் என்பது ஒரு கருத்தியல், இனமாக பார்த்தால் அதை 'மரபினம்' என்று சொல்லலாம். திராவிட மரபினம், ஆரியன் மரபினம். மரபினங்களுக்குள் பல மொழிகள் பேசக்கூடிய தேசிய இனங்கள் இருப்பார்கள்.
அம்பேத்கர் கூட திராவிடன் தான். பெரியார் காலத்தில் கூட பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் தான் உருவாகியது. ஆனால், இன்றைக்கு தலித் அல்லாதவர்கள் இயக்கம் உருவாகி வருகிற அளவிற்கு ஜாதியவாதிகள் உருவாகியிருக்கிறார்கள். அதற்கு காரணம் ஆர்எஸ்எஸ், பாஜக, சனாதனம்" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆரியம், திராவிடம் என்பது கட்டுக்கதை என்று சொன்ன அம்பேத்கரை 'திராவிடன்' என்று சொல்லி மலிவு அரசியல் செய்யும் திருமாவளவன் அவர்களே, திராவிடம் என்பது நிலப்பரப்பு, மரபினம் அல்ல என்பதை அம்பேத்கர் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது தெரியாமல் அல்லது தெரிந்தே மறைத்து அம்பேத்கரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது ஏனோ?
ஈ.வே.ரா காலத்தில் தான் பட்டியலினத்தவர்கள் மற்றும் பிராமணர்கள் அல்லாத இயக்கமான நீதிக்கட்சி வளர்க்கப்பட்டது, நீதிக்கட்சியின் நீட்சி தான் திமுக என்று மார் தட்டிக்கொள்கிற முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் அவர்களின் திமுகவுக்கு பல்லக்கு தூக்குவதற்கு, அதிகார அரசியலில் ஈடுபடுவதற்கு ஆர் எஸ் எஸ் ஐயும், பாஜகவையும், சனாதனத்தையும் குறை சொல்வது தரம் தாழ்ந்த அரசியல்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
NTK and BJP reply to Thirumavalavan