உங்களுக்குப் படியளக்கிற உங்கள் எஜமான் ஸ்டாலினை வரச் சொல்லுங்க - திருமுருகன் காந்திக்கு பதிலடி கொடுத்த இடும்பாவனம்! - Seithipunal
Seithipunal


எங்களோடு வாதிட முடியாதவர்கள் எங்கள் மீது அவதூறு பரப்பி வருவதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருந்தார்.

இதனை சுட்டிக்காட்டி, மே 17 திருமுருகன் காந்தி, "நேரடி விவதத்திற்கு  அழைத்து 2 வாரங்களாகிறது. நீங்கள்  வரவுமில்லை.

உங்கள் வீட்டு வாசலுக்கே கூட வந்தாயிற்று. நீங்கள் வீட்டைவிட்டு வெளியே எட்டிக் கூட பார்க்கவில்லை. வாய்திறந்தால் தானே வாதிட முடியும்" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், திருமுருகன் காந்திக்கு, நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், "எங்கள் அண்ணன் வீட்டுக்கு ஒரு  கிலோ மீட்டருக்கு அப்பால் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் எனும் வணிக வளாகத்தை முற்றுகையிட்டுவிட்டு எதற்கு டிவிட்டரில் வாய்ச்சவடால்?

எங்கள் அண்ணன் விவாதத்துக்கு வர வேண்டுமென்றால், உங்களுக்குப் படியளக்கிற உங்கள் எஜமான் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினை வரச் சொல்லுங்கள். எங்கள் அண்ணன் வருவார்.

உங்களோடு விவாதம் செய்ய வேண்டுமென்றால், தம்பி, தங்கைகள் நாங்கள் வருகிறோம். எப்போது? எங்கே? என இடம், நேரத்தைக் குறித்துவிட்டுச் சொல்லுங்கள்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk idumbavanam karthi DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->