வேங்கைவயல் வழக்கு: அந்த 3 பேருக்கு ஆதவாக விசிக தொடர்ந்த வழக்கு!
Vengaivayal Crisis CBCID Chargesheet VCK
கடந்த 2022 டிசம்பர் 26 அன்று வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கை விசாரித்து வந்த நிலையில், முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், முட்டுக்காடு ஊராட்சித் தலைவரின் கணவரை பழிவாங்கவே இச்செயல் நடந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. முரளிராஜா ஆயுதப்படை காவலராகவும், மற்ற இருவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
ஆரம்பம் முதலே இவர்கள் மீது சந்தேகம் இருந்ததாகவும், அறிவியல் பூர்வமான சாட்சிகளின் அடிப்படையிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
ஆனால் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களையே குற்றவாளிகளாகக் கூறியதற்கு பாஜக, தவெக, விசிக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உண்மை குற்றவாளிகளைக் கண்டறியவும், சிபிஐ விசாரணை கோரியும் வேங்கைவயல் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் சார்பில் விசிக வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், மூவரின் பெயர்களை குற்றப்பத்திரிகையிலிருந்து நீக்கவும், வழக்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திலிருந்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
English Summary
Vengaivayal Crisis CBCID Chargesheet VCK