நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக உழைப்பாளர் நாள் கொண்டாட்டம்.!
NTK may day 2022
நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக உழைப்பாளர் நாள் கொண்டாட்டப்பட்டது.
உழைக்கும் மக்களின் உரிமையை தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலைநிறுத்திய தொழிலாளர்களால், உலகளாவிய அளவில் தொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டதைப் போற்றும் விதமாக உலகெங்கும் உழைப்பாளர் நாளாகக் கொண்டாடப்படுகின்ற மே நாளையொட்டி இன்று 01-05-2022 காலை 10 மணியளவில், நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில், தொழிற்சங்கப் பேரவை மாநிலத் தலைவர் இரா.அன்புத்தென்னரசன் மற்றும் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் ச.சுரேஷ்குமார் ஆகியோரது தலைமையில் மே தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில், அரசு போக்குவரத்துக் கழக சென்னை கோட்டச் செயலாளர் மு.குமரன் தொழிற்சங்கப் பேரவைக் கொடியேற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் கதிர் இராஜேந்திரன் அவர்கள் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவுக் கல்வெட்டைத் திறந்துவைத்தார்.
உடன் தொழிற்சங்கப் பேரவை துணைத்தலைவர் கோ.சீனிவாசன், திருப்பெரும்புதூர் நாடாளுமன்றப் பொறுப்பாளர் ஈரா.மகேந்திரன், தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் மு.ஆனந்த், உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னண்ணன், மதுரவாயல் தொகுதிச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட தொழிற்சங்கப்பேரவை பொறுப்பாளர்களும், கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இவ்வாறு நாம் தமிழர் கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.