மருதமலையில் பரபரப்பு: நா.த.க.வினர் கைது! பாசிசக் கோமாளி ஸ்டாலின்... இடும்பாவனம் கார்த்தி கடும் கண்டனம்!
NTK Protest DMK MK Stalin TN POlice Maruthamalai
கோவை: மருதமலை முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் துண்டறிக்கை பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, காவல்துறையினர் நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்தி தரதரவென இழுத்துச்சென்று கைது செய்து உள்ளனர்.
இதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அக்கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி, "மருதமலை முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்யக்கோரி வீரத்தமிழர் முன்னணி சார்பாக, மருதமலை கோயில் அடிவாரத்தில் துண்டறிக்கை கொடுத்த நாம் தமிழர் உறவுகளை கைதுசெய்து, கொடூரமாகத் தாக்குதல் தொடுத்திடுக்கிறது பாசிசக் கோமாளி ஸ்டாலின் அரசின் காவல்துறை.
பெண்களும் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். துண்டறிக்கை கொடுத்தால் கைதா? தமிழில் வழிபாடு கோரினால் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
NTK Protest DMK MK Stalin TN POlice Maruthamalai