தம்பிகளிடம் வாயை கொடுத்து வாங்கிக்கட்டிக்கொண்ட வன்னியரசு.! விசிக-வின் மொத்த நாடகம் அம்பலமான கேலிக்கூத்து.!
NTK VS VANNIYARASU
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்துல், தன்னை பாஜகவின் ஆதரவாளர் சங்கி என்று அழைக்கும் திமுகவினரை எச்சரிக்கும் விதமாக கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.
அதாவது என்னைப் பார்த்து என்னடா சங்கி என்று சொல்கிறீர்கள்? நீங்கள் தானடா பச்சை சங்கிகள் என்று திமுகவினரை கடுமையாக விமர்சித்து, தான் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி மேடையிலேயே எடுத்து எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு உடன்பிறப்புகள் கடுமையாக தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். ஆனால், தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் இதற்கு பெரிதாக எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை., சீமானுக்கு கண்டனமும் தெரிவிக்கவில்லை. சொல்லப்போனால் திமுகவின் கூட்டணி கட்சிகள் கூட சீமானுக்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில், தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே நாம் தமிழர் கட்சியினர் நீண்ட நாளாக சிறையில் இருக்கக்கூடிய இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திமுக உடன் பிறப்பு ஒருவர் மேடையில் ஏறி நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் மீது தாக்குதல் நடத்தினார். இது இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். திமுகவினரின் இந்த அராஜகச் செயல் கடும் கண்டனத்துக்குரியது., அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அந்த வகையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனும் தனது கண்டனத்தை தெரிவித்தார். அதே சமயத்தில் செருப்பை கழட்டி எச்சரித்த சீமானுக்கும் தனது கண்டனத்தை தெரிவித்தார்.
மேலும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில், இஸ்லாமிய மக்களுக்காக நாம் தமிழர் கட்சி இதுவரை எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளது. ஏன் இந்த நாடகம் என்று நாம் தமிழர் கட்சியினருக்கு கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்லாமிய நபரான ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
"விடுதலை சிறுத்தைகள் கட்சி இதுவரை எத்தனை போராட்டங்களை முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்காக நடத்தி உள்ளது என்று சொல்லமுடியுமா தோழரே?
பத்துக்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களை அழைத்து இந்திய தேசிய லீக் கட்சி நடத்தி உள்ளது.
ஆனால் ஒரு கூட்டம் கூட விடுதலை சிறுத்தை கட்சி தலைமையில் இதுவரை நடத்தவில்லை.." என்று வன்னியரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இவரின் இந்த பதிவு வன்னியரசுக்கு மட்டுமல்ல விடுதலை சிறுத்தை கட்சி இஸ்லாமியர்களுக்காக போராடவில்லை என்பதை, இஸ்லாமிய மக்களுக்கு உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்கிக் கொண்டது போல... வன்னியரசு தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சிக்கு கேள்வி எழுப்பி.., விசிக, வன்னியரசின் நாடகம் அம்பலம் ஆகியிருப்பது சமூகவலைதளங்களில் நெட்டிசன்களால் கேலிக்கூத்தாக பார்க்கப்படுகிறது.