ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பின்னடைவு!!
O Panneerselvam continued setback in Ramanathapuram
தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயச்சை வேட்பாளராக ராமநாதபுரம் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக உடன் கைகோர்த்து சுயச்சையாக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு பலாப்பயா சின்னம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் பெயரில் ஐந்து வேட்பாளர்கள் சோர்சையாக போட்டியிட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு வீடு கட்டங்களாக நடைபெற்று கடந்த ஜூன் ஒன்றாம் தேதி மக்களவைத் தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அந்த வகையில் இன்றும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்று காலையிலிருந்து வாக்கு என்னும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில், பாஜக சார்பாக சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 26,162 வாக்குகளை பெற்று தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி ஐ.யூ.எம்.எல் வேட்பாளர் நவாஸ் கனி 20000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
O Panneerselvam continued setback in Ramanathapuram