வெளியான தேர்தல் முடிவு., அதல பாதாளத்தில் பாஜக, காங்கிரஸ்.! மாபெரும் வெற்றி சாதனையை படைத்த ஆளும் கட்சி.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநில கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவில் பாஜக, காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளன. 

ஒடிசா மாநிலத்தில் 5 கட்டமாக நடந்து முடிந்த கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று முழுமையாக வெளியாகின. மொத்தம் 851 மாவட்ட ஊராட்சி பதவிகளுக்காக இந்த தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் 78.68 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி அபார வெற்றியை பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 786 இடங்களில் வெற்றி பெற்று மாபெரும் சாதனையை அக்கட்சி படைத்துள்ளது. 

அதே சமயத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளன. பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலை விட, பாஜகவுக்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. ஆளும் பிஜூ ஜனதா தளத்துக்கு அதிக சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha local body election result


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->