மீண்டும் சர்ச்சை.. "யம்மா..யம்மா.. போதும் நிப்பாட்டுமா".! மூதாட்டியால் டென்ஷனான அமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் மற்றும் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது "குடும்பத் தலைவர்களுக்கு எல்லாருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் வகையில் அந்த பணிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

நீங்கள் கேட்கிறீர்களோ இல்லையோ அனைவருக்கும் கிடைக்கும் வரை நாங்கள் விட மாட்டோம்" என பேசிக் கொண்டிருக்கும் பொழுது கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர் "முதலமைச்சர் கிட்ட சொல்லி விலைவாசியை குறைக்க சொல்லுங்க" என அமைச்சரின் காதில் விழும் அளவிற்கு புலம்பினார். அதற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் "கவுண்டமணி, செந்தில் பட காமெடி போட மேல இருக்கும் புண்ணியவான். விலைவாசி உயர்வை மேலே இருப்பவர் தான் பார்க்கணும். 

தக்காளி விலை உயர்ந்ததற்கும் அவங்க தான் காரணம், உங்களுக்கு கேஸ் விலை உயர்ந்ததற்கும் அவங்க தான் காரணம். ஏதோ எங்களால் முடிந்ததை நாங்கள் செய்து கொடுக்கிறோம்" என பேசிக்கொண்டு இருக்கும்போதே அந்த மூதாட்டி கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்ததால் கடுப்பான திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் "ஏம்மா.. ஏம்மா.. நிப்பாட்டுமா.." என கேள்வி எழுப்பிய மூதாட்டியின் வாயை அடைத்தார். இதனால் அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஏற்கனவே தன்னிடம் மனு கொடுத்த வயதான பெண்மணியை மனு கொடுத்த பேப்பரை வைத்து தலையால் அடித்தது சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old woman questioned to DMK minister about price hike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->