I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சட்டமன்ற பொது தேர்தலை நடத்தும் விதமாக ஒரே நாடு; ஒரே தேர்தல் குறித்து ஆராய மத்திய அரசு சிறப்பு குழுவை அமைத்துள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நிறைவேற்ற வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முதல் எதிர்க்கட்சிகளின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரே நாடு; ஒரே தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே வேளையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடி அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதற்கிடையே இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா இண்டியா கூட்டணியின் பிரதமர் முகத்தை இப்போதே அறிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கருத்து தெரிவித்துள்ளார். 

மும்பையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில்பங்கேற்பதற்காக வந்த அவரிடம் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் "பிரதமர் முகத்தை இப்போதே அறிவிக்க வேண்டும் என்கின்ற அவசியம் இருப்பதாக கருதவில்லை. முதலில் தேர்தல் நடைபெற்று எங்கள் கூட்டணிக்கு அரிசி பெரும்பான்மை கிடைக்கட்டும். அதன் பிறகு பிரதமர் குறித்து முடிவெடுக்கப்படும்" என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Omar Abdullah said india alliance PM candidate decided after election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->