அடி மேல் அடி.. செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்.!! அதிர்ச்சியில் திமுக தரப்பு.!!
One more complaint against Selam DMK candidate
சேலம் தொகுதியில் அதிகாரப்பூர்வ திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வகணபதி வாக்காளர் பட்டியலில் தனக்கு இரண்டு இடங்களில் பெயர் இருப்பதை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக எது கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் செல்வகணபதியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். இது குறித்து செல்வகணபதி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் அடங்குவதற்குள் செல்வகணபதியின் மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சுடுகாடு கொட்டகை ஊழலில் தண்டனை பெற்று பின்பு அதிலிருந்து விடுதலையானது, மற்றும் வண்ண தொலைக்காட்சி ஊழலில் தண்டனை பெற்று பின்பு அதிலிருந்து விடுதலை ஆனது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என சேலம் திமுக வேட்பாளர் மீது மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் செல்வ கணபதியின் வேட்பு மனு ஏற்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே திமுக சார்பில் நிறுத்தப்பட்ட மாற்று வேட்பாளர் சம்பத்தின் வேட்பு மனு இயக்கப்பட்டுள்ளது. இதனால் செல்வகணபதியின் வேற்றுமொரு நிராகரிக்கப்பட்டால் சம்பத் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
One more complaint against Selam DMK candidate