ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் - பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election Central Cabinet PM Modi
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஆய்வு மேற்கொண்டது.
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளுக்கு, இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக மசோதா தாக்கல் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடைபெற்றதாக, மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
மேலும் பல்வேறு தரப்பினரிடமிருந்து விரிவான ஆலோசனை மேற்கொண்ட பிறகே பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
English Summary
One Nation One Election Central Cabinet PM Modi