ஒரே நாடு ஒரே தேர்தல் || முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு!
ONOE committee decided to seek recognized parties review
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற பொது தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் விதமாக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை மத்திய சட்டத்துறை அமைச்சகம் நியமித்தது.
இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் பங்கேற்ற இந்த கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
இந்த முதல் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற தேசிய மற்றும் மாநில கட்சிகள் இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய சட்ட ஆணையத்திடமும் கருத்து கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை இந்த கூறக்கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
ONOE committee decided to seek recognized parties review