வேண்டுகோள்!!! எதிர்க்கட்சி தலைவர் டெல்லியில் யாரை சந்தித்தாலும் இருமொழிக் கொள்கையை வலியுறுத்துங்கள்!!! - முதலமைச்சர்
Opposition Leader whoever you meet in Delhi insist on the bilingual policy Chief Minister
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது,"எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யாரை சந்தித்தாலும் இருமொழிக்கொள்கையை வலியுறுத்த வேண்டும்.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் துணைத்தலைவர் பேசும் போது இருமொழிக் கொள்கை விவகாரத்தில் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.
இருமொழி என்பது நமது கொள்கை மட்டும் அல்ல, நமது வழிக்கொள்கையும் விழிக்கொள்கையும் அதுதான்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தற்போது அரசியல் ஆர்வலர்களிடையே பரவி வருகிறது.
English Summary
Opposition Leader whoever you meet in Delhi insist on the bilingual policy Chief Minister