மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சுக்கு எதிர்ப்பு - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு..!! - Seithipunal
Seithipunal



மக்களவை மற்றும் மாநிலங்களவை என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத் தொடரும் தற்போது நடந்து வருகிறது. அதில் தற்போது இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அவை உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றினார். அப்போது அவர், "விவசாயிகளுக்கு இதுவரை எந்த அரசும் செய்யாததை பாஜக அரசு செய்துள்ளது. 

நிலத்தில் இருந்து சந்தைக்கு செல்வது வரை விவசாயிகளுக்கு நாங்கள் துணை நிற்போம். வேளாண் பொருட்களுக்கான MSP யை நாங்கள் உயர்த்தினோம். காங்கிரஸ் விவசாயிகளை எப்படி தவறாக வழிநடத்தியது என்பதை நாடே அறியும். மேலும் பொதுப் போக்குவரத்தில் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டு வருவோம். நாட்டில் உள்ள 2 மற்றும் 3ம் கட்ட நகரங்களை மேம்படுத்துவதில் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம்" என்று பேசினார்.

இதையடுத்து மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு பதிலளிக்க சபாநாயகரிடம் அனுமதி கோரினார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது. இதையடுத்து மாநிலங்களவைக்கு பிரதமர் மோடி தவறான தகவல்களை வழங்குகிறார் என்று கூறியபடியே காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க் கட்சிகளும் வெளிநடப்பு செய்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opposition MPs Walks Out From Rajya Sabha


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->