''சர்வதேச விருது'' வென்ற தனுஷ் திரைப்படம்! வாழ்த்து மழையில் படக்குழு.! - Seithipunal
Seithipunal


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் ''கேப்டன் மில்லர்''. இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

வரலாற்று பின்னணியில் ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்திப் கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

இந்த திரைப்படம் சுமார் 90 கோடி வசூலித்ததாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த திரைப்படம் பங்கு பெற்றது. அந்த வகையில் லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரிட்டன் தேசிய விருது விழாவில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த அயல் மொழி திரைப்பட பிரிவில் ''கேப்டன் மில்லர்'' திரைப்படம் இந்தியாவின் இருந்து தேர்வு செய்யப்பட்டது. 

இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டதை  தொடர்ந்து பட குழுவின் சார்பாக இந்த விருதை சத்யஜோதி நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜன் பெற்றுக் கொண்டார். சர்வதேச அளவில் முக்கியமான விருதை பெற்ற கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

இது தொடர்பான செய்தியை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்த மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து, படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush movie wins national film award


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->