எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாடு செய்திருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்று காலை தொடங்கிய இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது. நாடு முழுவதிலும் இருந்து 15 எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன. இன்று எதிர்க்கட்சிகளின் முதலாவது கூட்டம் நிறைவு பெற்ற நிலையில் இமாச்சல் பிரதேச தலைநகர் சிம்லாவில் எதிர்க்கட்சிகளின் 2வது கட்ட கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து அனைத்து எதிர்கட்சிகளும் நேரடியாக ஆலோசனையில் ஈடுபட்டன. இந்தக் கூட்டத்தில் பாஜகவுக்கு எதிர் அணியில் இருக்கும் நவீன் பட்நாயக், மாயாவதி, ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு, குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் இமாச்சல் பிரதேச மாநில தலைநகர் சிம்லாவில் நடைபெறும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளர். இன்று நடைபெற்ற கூட்டத்தில் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார். குஜராத் மாநில தேர்தல் உடன் நடைபெற்ற ஹிமாச்சல் பிரதேச தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தற்போது அங்கு ஆட்சியில் அமர்ந்துள்ளது.

எனவே இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைமை தாங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இமாச்சல் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்த மாநிலம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாவது கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opposition parties 2nd consultation meeting to be held in Shimla


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->