அமித் ஷா பதவி விலக கோரி மக்களவையை முடக்கிய எதிர்க்கட்சிகள்.!!
Opposition parties demanding Amit Shahs resignation in Lok Sabha
நாடாளுமன்ற பாதுகாப்பை மீறிய விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கை மற்றும் அவர் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நடவடிக்கைகள் இன்று மதியம் 12 மணி வரை ஓத்த்திவைக்கப்பட்டது.
இன்று மக்களவை கூடியதும் கடந்த சனிக்கிழமையன்று மறைந்த குவைத் எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, டிசம்பர் 13 அன்று நடந்த பாதுகாப்பு மீறல் சம்பவத்தைத் தொடர்ந்து மக்களவை செயலகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா சபையில் விளக்கம் அளித்தார்.
மேலும் மக்களவையை சுமுகமாக நடத்த அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இருப்பினும், எதிர்க்கட்சி மக்களைவை உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து அறிக்கை வேண்டும் எனவும், பாதுகாப்பு மீறல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்யக் கோரியும் மக்களவையில் கோஷம் எழுப்பினர். இதனால் மக்களவை ஒத்திவைக்கபட்டது.
English Summary
Opposition parties demanding Amit Shahs resignation in Lok Sabha