பிரதமர் வேட்பாளராகிறாரா கார்கே.? கூட்டணி கட்சிகள் ஆதரவு.! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து உருவாகியுள்ள இந்தியா கூட்டணியின் 4வது கூட்டம் டில்லியில் நேற்று மாலை நடைபெற்றது. நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை பொது தேர்தலுக்கு பின் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டது. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்கி இந்த மாத இறுதியில் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அனால் தொகுதி பங்கீடு ஜனவரி 2-ஆம் வாரத்தில் முடிக்கப்பட்டு பிரசாரம் தொடங்கப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் திரிணமூல், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, டில்லியில் ஆம் ஆத்மி, தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி அமைக்க திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை அறிவிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரின் முன்மொழிவை கார்கே ஏற்க மறுத்ததாகவும், தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கலாம் என்று கூறியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

opposition parties support Karke a prime ministerial candidate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->