அதிமுக பொதுக்குழு வழக்கு :: இடைக்கால பொதுச் செயலாளரா.. அப்படி ஒரு பதவியே இல்லை.. ஓபிஎஸ் தரப்பு வாதம்..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் தங்களது வாதங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் "அதிமுக பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்க கோரியும் ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்புதல் இன்றி 15 நாட்கள் முன்பே நோட்டீஸ் அனுப்பாமலும் பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்று பன்னீர்செல்வம் தரப்பினர் சிவில் வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கூறினால் மட்டுமே பொதுக்குழு கூட்ட வேண்டும் என்றும் 15 நாட்களுக்கு முன்பை நோட்டீஸ் அனுப்பிய பிறகு தான் பொதுக்குழு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது" என வாதத்தினை முன் வைத்தார். அதற்கு நீதிபதிகள் "சிவில் வழக்குகளில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் முன்வைக்கப்பட்டனவா..?? சீவில் வாழக்கில் கொடுக்கப்பட்ட உத்தரவுகளை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முழுமையாக ரத்து செய்துள்ளதா..??" என கேள்வி எழுப்பினர்.

அதற்கு இபிஎஸ் தரப்பினர் "ஜூலை 11ல் நடந்த அதிமுக பொது குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு இதுவரை வழக்கு தொடரவில்லை" என வாதத்தினை முன்வைத்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் "கட்சிக்கு இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டாரா..?" என கேள்வி எழுப்பினர். அதற்கு இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் "இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வாகியுள்ளார். பொதுச்செயலாளர் தேர்தலுக்கு ஓபிஎஸ் தரப்பு தடை விதிக்க கோரியது. நீதிமன்றம் கேட்டுக் கொண்டதால் தான் தேர்தல் நடத்த மாட்டோம் என வாக்குறுதி அளித்தோம்" என இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்தார். 

அப்போது குறுக்கிட்ட ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் "அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும். பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருவரை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய முடியாது. அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியே இல்லை. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் செல்லுபடி ஆகும். கடந்த டிசம்பர் 2021ல் இருவரும் தேர்தல் முறையில் போட்டியின்றி தேர்வாகினர். இருவரின் பதவிக்காலமும் டிசம்பர் 2026 வரை உள்ளது" என வாதிட்டுள்ளார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS argued Interim General Secretary post not have in AIADMK


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->