#BigBreaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் "செந்தில் முருகன்" வாபஸ்..!! - Seithipunal
Seithipunal


இரட்டை இலை சின்னம் முடுக்கப்படக்கூடாது என்பதற்காக வேட்பாளர் வாபஸ்..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டனர். 

எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்தனர்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை இரு தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்தார். இதற்கிடையே பழனிச்சாமி தரப்பினர் தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர்களால் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கிய கடிதத்துடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இந்திய தேர்தல் ஆணையரை சந்திக்க டெல்லி சென்றுள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறப்பட்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சர்ருமான கு.ப.கிருஷ்ணன் பேசியதாவது "அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அதிமுக சார்பாக வேட்பாளரை அறிவித்திருந்தார். எங்களுடைய நோக்கமே இரட்டை இலை சின்னம் எந்த வகையிலும் முடக்கப்பட்டு விடக்கூடாது என்பதுதான்.

இரட்டை இலை சின்னம் தோல்வி என்ற பேச்சு வரக்கூடாது என்பதற்காக பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு முடிவுகளை எடுத்தோம். இதன் மூலம் எங்களின் நோக்கம் வெற்றி பெற்றுள்ளது.

எனவே ஓபிஎஸ் அவர்களால் அறிவிக்கப்பட்ட எங்கள் வேட்பாளர் செந்தில் முருகன் அவர்கள் இந்த போட்டியில் இருந்து விலகுகிறார். எனவே நாங்கள் இரட்டை இலை சின்னம் வெற்றி பெறுவதற்காக இத்தகைய முடிவை எடுத்து உள்ளோம். இரட்டை இலை சின்னம் வெற்றி பெறுவதற்காக நாங்கள் பாடுபடுவோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப..கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS candidate Senthil Murugan withdraws from erode east byelection


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->