தேவர் சிலைக்கு 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட கவசம் - ஓபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal



பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை நாளான இன்று, அவரது நினைவிடத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவாக, "10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசம்" வழங்கி மரியாதை செலுத்தப்படும் என்று, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று வெளியான அந்த செய்திக்குறிப்பில், "தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவரும்; ஆன்மீகம், தேசியம், பொதுவுடைமை, ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றை குறிக்கோள்களாகக் கொண்டு செயல்பட்டவரும்; 

தமிழகம் உயர, தமிழ்நாடு வளம் பெற, தமிழ்ச் சமுதாயம் மேம்பட உழைத்தவரும்; 'வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம், விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்' என்று முழங்கியவரும்; தன்னலமின்றி நாட்டிற்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காகவும் அரும்பாடுபட்டவருமான தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 115-வது பிறந்த நாள் மற்றும் 60-வது குருபூஜை நாளான இன்று (30-10-2022),

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவாக, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் இதர சுப நாட்களில் வெள்ளிக் கவசம் அணிவிக்கும் பொருட்டு, 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடக் காப்பாளர் ந. காந்தி மீனாள் அம்மையார் அவர்களிடம் ஓ. பன்னீர்செல்வம் வழங்கி மரியாதை செலுத்துவார்கள்." என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Devar Guru Pooja 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->