ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குகிறாரா? அதிரவைத்த கூட்டம்! பரபரப்பு பேட்டி!
OPS New Party info
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறார்.
இந்த இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமையேற்று பேசிய ஓ பன்னீர்செல்வம், "நாம் தனி கட்சி தொடங்கலாம் என்று இங்கு இருந்த நிர்வாகிகள் பலரும் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். ஆனால், எனக்கு தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இப்போது இல்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மாவின் சொத்து. அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் உரிமையை மீட்டெடுப்பது தான் எனது கடமை" என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தெரிவிக்கையில், நடந்து முடிந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் ராமநாதன் தொகுதிகள் போட்டியிட்ட என்னை, நாட்டிலேயே அதிகமாக வாக்குகளை பெற்ற சுயேச்சை வேட்பாளராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இது ஒன்றே போதும், அதிமுகவின் தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க வேறு என்ன வேண்டும். முன்னாள் அமைச்சர் சிவி சண்முகமும், அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அப்படி இணையவில்லை என்றால் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். உண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கு அதிமுக ஒருங்கிணையாதது தான் காரணம்.
இரட்டை இலை சின்னம் இப்படி ஒரு தோல்வியை கண்டதே இல்லை. அதிமுகவில் நான் பதவிக்காக ஒருங்கிணைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. தொண்டர்கள் எனக்கு என்ன பதவி கொடுத்தாலும் அதை நான் ஏற்க தயாராக உள்ளேன்.
அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான ஆறு வழக்குகளும் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு தான் இறுதியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்டு இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்" என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.