ஜன.25ல் திரள வேண்டும்... குஜராத் சென்ற ஓபிஎஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை...!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று காலை  ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பாஜக ஆளும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று உள்ளார். அங்கே ஈரோடு இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் குஜராத் சென்ற ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைமை கழக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் "இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தின் பொழுது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் நாள் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. 

அன்னைத் தமிழுக்காக உயிர் துறந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுக சார்பில் 25/01/2023 புதன்கிழமை அன்று கழக அமைப்பு ரீதியை செயல்பட்டு வரும் மாவட்ட தலைநகரங்களில் மொழிப்போர் தியாகிகள் திருவுருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்துமாறு அனைத்து மாவட்ட கழகச் செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மேற்படி நிகழ்ச்சியில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், கழக சார்பு அணியின் நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்டம், கிளை அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள்" என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS notice admins to pay homage to language war martyrs


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->