இது வெட்கக்கேடானது., அமைச்சர் மா சு.,க்கு பதிலடி கொடுத்த ஓபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமய்யன் நேற்று அளித்த பேட்டியில்,  "மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரியிலேயே அரசாணை தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதே வெளியிடப்பட்டுள்ளது. 

ஆனால் அதிமுக அரசு தாங்கள் தான் கொண்டு வந்தார்கள் என்று கூறுகிறார்கள். உண்மையிலேயே அதிமுகவால் தான் இது தாமதமானது. அதுமட்டுமின்றி அதிமுகவால் தான் மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது என்று மார்தட்டிக் கொள்வதில் நியாயம் இல்லை" என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இதற்க்கு பதிலளித்துள்ள அதிமுக அருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், "ஆட்சியை விட்டு போகும் தருவாயில் மக்களை ஏமாற்றுவதற்காக ஓர் அரசாணையை வெளியிட்டுவிட்டு அதை ஒரு சாதனை என்று கூறுவது வெட்கக்கேடானது, நியாயமற்றது? 

கிட்டதட்ட 17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, பொதுநலக் கோரிக்கைகளான மாநில சுயாட்சி குறித்தோ, கல்வியை மாநிலப் பட்டியலில் எடுத்து வருவது குறித்தோ, தமிழ்நாட்டிற்கான மத்திய வரிப் பகிர்வு குறைந்து கொண்டே வருவது குறித்தோ, மேல்வரி குறித்தோ, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி குறித்தோ வாய் திறக்காமல் மவுனியாக இருந்துவிட்டு, சாதனை படைத்திட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை குறை கூறுவது கடும் கண்டனத்திற்குரியது. 

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சென்னை, அடையாரில் உள்ள க்ரீக் பகுதியில் அமைக்கப்பட்ட பூங்கா, மகிந்திரா சிட்டியில் அமைக்கப்பட்ட பி.எம்.டபிள்யு தொழிற்சாலை, ஓரகடம் பகுதியில் அமைக்கப்பட்ட வாகன பரிசோதனை மையம் போன்ற பல திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டது போன்ற மாயத் தோற்றத்தை தி.மு.க. தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தியது. 

அந்த வகையில், 12-01-2022 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளும் தி.மு.க. அரசின் சாதனை போல சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. 

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்' என்பதற்கேற்ப, தி.மு.க. என்கிற சுயநலம் விரைவில் புறக்கணிக்கப்பட்டு மீண்டும் அ.இ.அ.தி.மு.க. என்கிற பொதுநலம் வீறுகொண்டு எழும்" என்று முன்னாள் முதலவர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops reply to minister maa su


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->