இபிஎஸ் தரப்புக்கு விலகாத அந்த மர்மம் : செய்தியாளர் கேட்ட கேள்வி., ஒருமாதிரி பதில் சொன்ன ஓபிஎஸ்!
OPS SAY ABOUT RAID ISSUE 2022
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ பன்னீர்செல்வம் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பு வைக்கக்கூடிய குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, 'திமுகவுடன் ரகசிய கூட்டணியில் ஓ பன்னீர்செல்வம் இருந்து வருகிறார்' என்ற குற்றச்சாட்டு தான்.
இதற்கு காரணம் முன்னாள் முதல்வர் கருணாநிதியை சட்டமன்ற சட்டப்பேரவையில் ஓபிஎஸ் புகழ்ந்து பேசியதும், அவரின் மகன் முதல்வருக்கு பொன்னாடை போற்றி, உங்களை ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று கூறியதும் தான்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது, இப்படி அவர்களால் செய்ய முடியுமா? செய்துவிட்டு இந்த கட்சியில் இவர்களால் இருக்க முடியுமா? என்ற கேள்வியையும் இபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் மீது மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதிமுக தலைமை கலவர வழக்கில் கூட எடப்பாடி பழனிசாமி தரப்பின் மீது தான் தமிழக போலீசார் நடவடிக்கை எடுத்ததாகவும், இதனால் ஓ பன்னீர்செல்வம்-திமுக மறைமுக ஆதரவை கொடுத்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம் சாற்றி வந்தனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வத்திடம் இந்த மர்மம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ், "லஞ்ச ஒழிப்புத்துறை தனது கடமையை தான் செய்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் தான், தாங்கள் குற்றம் அற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்" என்றுஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
English Summary
OPS SAY ABOUT RAID ISSUE 2022