அரிசி நீரில் முகத்தைக் கழுவலாமா? - நன்மைகள் என்ன?
benefits of rice water
தற்போதைய காலத்தில் உள்ள பெண்கள் அனைவரும் தங்களது உடல் அழகினை பாதுகாத்து கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் அரசி கழுவிய தண்ணீரில் முகத்தைக் கழுவுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துக் கொள்வோம்.
அரிசி நீரை முகத்தில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்:-
* அரிசி ஊறவைத்த நீரை கொண்டு முகத்தைக் கழுவுவது சருமத்தை பிரகாசமாக்கி பளபளப்பாக்க உதவுகிறது. இது சருமத்தை ஈரப்பதமாக்கி வறண்டு போவதைத் தடுக்கிறது.
அரிசி நீரில் முகப்பருவைக் குறைக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை சருமத்தை சுருக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றன. இது வெயிலிலிருந்து விடுபட உதவுகிறது மற்றும் சருமத்தை குளிர்விக்கிறது.
சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் ஆக்குகிறது. இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் பல பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாக்கிறது.