#BREAKING:: அடி மேல் அடி... மொத்தமாக நிராகரிப்பு.. அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு.. குஷியில் அதிமுக..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் வேப்பமணம் மீதான பரிசீலனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கர்நாடக மாநிலத் தேர்தலைப் பொருத்தவரை ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதற்கிடையே கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக சார்பில் பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் அம்மாநில அவைத் தலைவர் அன்பரசன் போட்டியிடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்த நிலையில் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதேபோன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கர்நாடக மாணவர் அணி செயலாளர் நெடுஞ்செழியன் என்பவரும், கோலார் தங்கவயல் சட்டமன்ற தொகுதியில் கர்நாடக மாநில கழக தலைவர் ஆனந்தராஜ் என்பவரும், காந்திநகர் சட்டமன்ற தொகுதியில் குமார் என்பவரும் வேட்பாளர்களாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் இவர்கள் அனைவரின் மனுவும் இன்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டது. அதில் அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் அன்பரசனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அதிமுக தரப்பினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதே வேளையில் ஓபிஎஸ் தரப்பில் புலிகேசி நகர், கோலார் தங்க வயல் மற்றும் காந்திநகர் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த மூன்று பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS side candidates nominations rejected in Karnataka elections


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->