அதிமுகவை அழிக்கும் முடிவை இபிஎஸ் கைவிட வேண்டும் - ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் .! - Seithipunal
Seithipunal


இபிஎஸ் அதிமுகவை அழிக்கும் முடிவை கைவிட வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர்  கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு, ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தடை நீங்கியது எனவும் தீர்ப்பு வழங்கினார். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தேர்தல் ஆணையம் கொடுக்கும் தீர்ப்பே இறுதி தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் படி ஒ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளனர்.

இபிஎஸ் அதிமுகவை அழிக்கும் முடிவை கைவிட வேண்டும், அதிமுகவை ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே வழி நடத்த முடியும். இபிஎஸ் பொது செயலாளராவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம், அதிமுக தொண்டர்கள் இபிஎஸ் செயலால் மனம் வருந்தி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS supporter kovai Selvaraj speech about ADMK judgement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->