அராஜகத்தை அரங்கேற்றுவதற்கு முன்னோட்டமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செய்த சம்பவம்.. சற்றுமுன் முன்னாள் அமைச்சர் அதிரடி பேட்டி.! - Seithipunal
Seithipunal


 
சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை எடப்பாடிபழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள திருமண மண்பத்திற்கு செல்லும் வழியில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக அங்கு பேரணியாக வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தான் இந்த செயலை செய்ததாக, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்ததாவது, "கழகத்தினுடைய பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பாதுகாப்பாக செல்வதற்காக அமைக்கப்பட்ட பேனர் பேரிகார்டுகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்து சென்றுள்ளனர்.

இதனை நேரடியாகவே நின்று போலீசார் பார்த்துக்கொண்டு தான் இருந்தனர். இது குறித்த வீடியோ ஆதாரங்களும் போலீசாரிடம் உள்ளது. இந்த சமத்துவம் குறித்து நாங்கள் போலீஸாரிடம் புகார் அளிக்க உள்ளோம்.

நாளை அமைதியான முறையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த நாங்கள் தயாராகி வருகிறோம். விரும்பத்தகாத செயல்களை ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் 10 பெண்களை அழைத்து வந்து, தலைவருடைய புகைப்படத்தை எல்லாம் கிழித்து விட்டு சென்றுள்ளார்.

இது எந்த விதத்தில் நியாயம். ஒரு அமைதியான முறையில் பொதுக்குழு கூட்டத்தை நடைபெற வேண்டுமென்று நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கும் இந்த நிலையில், வேண்டுமென்றே ஒரு அராஜகத்தை அரங்கேற்ற வேண்டும் என்பதற்கு முன்னோட்டமாக செய்யக்கூடிய செயலாக, தலைவருடைய படங்களையெல்லாம் இவர்கள் கிழித்து உள்ளார்கள்.

இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்களைப் பொருத்தவரையில் அமைதியான முறையில் செயற்குழு, பொதுக்குழு நடைபெற வேண்டும். அதற்கான பணிகளை நாங்கள் நடத்தி வருகிறோம். நிச்சயமாக தர்மம் வெல்லும்... அராஜகம் வாழ்ந்ததாக வரலாறு இல்லை" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS supporters vs EPS supporters ADMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->