தமிழக அரசியலில் பரபரப்பு..!! நேற்று இபிஎஸ்.,க்கு வந்த கடிதம்... இன்று டெல்லிக்கு ஓபிஎஸ் தரப்பு எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் தேர்தலை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது அதற்காக இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்க மத்திய அரசு இந்திய சட்ட ஆணையம் மூலம் கடிதம் அனுப்பி வருகிறது.

அதன் அடிப்படையில் அதிமுகவுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு இந்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. எடப்பாடி தரப்பினர் இந்த கடிதத்தை கொண்டாடினாலும் பன்னீர்செல்வம் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இந்திய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் "அதிமுகவில் ஏற்பட்ட உட் கட்சி பிரச்சனை காரணமாக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்துள்ளார். தற்பொழுது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற ஒரே பதவி தான் உள்ளது. இதனை அடுத்து அதிமுகவுக்கு எதிராக ஒரு குழுவை சேர்த்துக்கொண்டு பழனிச்சாமி செயல்படுவதால் அதற்கு எதிராக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கு தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்திய சட்ட ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்தான கருத்து கேட்க அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி உள்ளது. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பிய கடிதத்தை திரும்பப் பெற்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கடிதம் அனுப்பு வேண்டும்" என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இந்திய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS team ask withdraw letter sent by Law Commission to EPS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->