இசட் பிரிவு பாதுகப்பை நிராகரித்த ஒவைசி.!
Ovaisi Rejects Z Protection
மத்திய அரசு வழங்க முன்வந்த துப்பாகி ஏந்திய கமாண்டோக்களின் இசட் பிரிவு பாதுகாப்பை ஏற்க ஒவைசி மறுத்துவிட்டார்.
உத்திர பிரதேச சட்ட சபை தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்ட பின் டெல்லி திரும்பிய அகில இந்திய மஜ்லிஸ் - இ - இத்தேஹாதுல் முஸ்லிமின் அமைப்பு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி வந்த கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் அசாதுதீன் ஒவைசி காயங்கள் ஏதுமின்றி தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஒவைசிக்கு துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்களின் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் பாதுகாப்பை ஏற்க ஒவைசி மறுத்து விட்டார்.
English Summary
Ovaisi Rejects Z Protection