BREAKING | பரமக்குடியில் பெரும் பரபரப்பு - தீயில் கருகி தூக்கிவீசப்பட்ட இளைஞர்! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுடைய நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு இன்று காலை முதல் அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பரமக்குடி ரயில் நிலையத்தில் திருச்சி-இராமேஸ்வரம் செல்லும் ரயில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென தனது சமுதாய கொடியை ஏந்தியடி ரயில் மீது இளைஞர் ஒருவர் ஏறினார்.

அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்சார கம்பி மீது அந்த இளைஞர் உரசி, தீயில் கருகி தூக்கி வீசப்பட்டார்.

படுகாயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சையாக தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த அந்த நபர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PARAMAKUDI IMANUVEL DAY ACCIDENT


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->