பரந்தூர் மக்கள் சந்திப்பு! விஜய்-க்கு காவல்துறை அனுமதி! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 5,700 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

ஆனால், இந்த திட்டத்திற்கு எதிராக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 907 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பகல் நேரங்களில் தங்கள் வாழ்வாதார பணிகளுக்கு செல்லும் மக்கள், இரவு நேரங்களில் ஒன்று கூடி திடல்களில் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  

இதற்கிடையே, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரந்தூரில் சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மேற்கொள்ளும் மேலாண்மைத் திட்டத்தை ஆய்வு செய்யவுள்ளதுடன், நிலம் கையகப்படுத்தப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்தையும் செய்ய உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு வெற்றிக்கழக தலைவர் விஜய் வரும் 20 ஆம் தேதி பரந்தூரில் போராடும் மக்களை நேரில் சந்திக்கவுள்ளார்.  

இதற்கான அனுமதியை காவல்துறை வழங்கியதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பரந்தூர் மக்களை பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு வெற்றிக்கழக தலைவர் விஜய் போராட்டக் களத்திற்கு நேரில் செல்வது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paranthur protest TVK Vijay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->