திராவிட கட்சியினர் இந்தி படிப்பதை தடுக்கின்றனர் - திமுக அதிருப்தி எம்.பி., பாரிவேந்தர் பேச்சு.!
parivendhan blames dmk about hindi
திராவிட கட்சியினர் ஏழை மக்கள் இந்தி படிப்பதை தடுக்கின்றனர் என பாரிவேந்தர் எம்.பி. குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாரிவேந்தர் பேசிய போது, "நாடாளுமன்றத்தில் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ள முடியாமல் தமிழக எம்பிக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்தி எதிர்ப்பு பற்றிய தீர்மான பொதுக்கூட்டங்களை திராவிட கட்சிகள் நிகழ்த்துகின்றன.
ஆனால் தாங்கள் குடும்பம் சார்ந்த பிள்ளைகளுக்கு இந்தி பாடத்தை கற்றுக் கொடுக்கின்றனர். அத்துடன் தாங்கள் நடத்துகின்ற கல்வியின் நிறுவனங்களிலும் இந்தி பாடம் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இப்படி இருக்கையில் ஏழை எளிய மக்கள் இந்தி தெரிந்து கொள்ள வேண்டாம் என்று தடுக்கின்றனர்.
எனது கட்சி உறுப்பினர்களின் திருமணத்திற்கு சீர்வரிசையாக 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு பவுன் தங்கம் வழங்கும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை எந்த கட்சியும் செய்யாத சாதனை இது." என்று தெரிவித்துள்ளார்
கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி (திமுக) ஆனவர் தான் பாரிவேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், போக கூடாத இடத்திற்கு சென்றுவிட்டேன் என்றும், திமுகவுடன் கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன் என்றும் அண்மையில் பாரிவேந்தர் எம்.பி., பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
parivendhan blames dmk about hindi