காலவரையின்றி பார்லிமென்ட் ஒத்திவைப்பு..!!! பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு...
Parliament adjourned indefinitely Budget session ends today
கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு நடந்தது.இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1ம் தேதி 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பிறகு கடந்த மார்ச் 10ம் தேதி 2 வது அமர்வு துவங்கியது. இந்த 2வது அமர்வு ஏப்ரல் 4 வரை நடக்க உள்ளது. மேலும் கூட்டத்தொடர் துவங்கி முதல் நாளிலிருந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. பார்லிமென்ட் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதில் லோக்சபாவை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
English Summary
Parliament adjourned indefinitely Budget session ends today