சூடு பிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்.. 2 நாட்கள் பாஜக முக்கிய ஆலோசனை கூட்டம்.!
Parliament election BJP discussion meeting
வரும் 2022 நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுடன் பாஜக தலைமை ஆலோசனை நடத்த உள்ளது.
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.
அதேபோல், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்கும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அந்த வகையில் இந்த ஆலோசனை கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கூட்டம் வெஃரும் ஜூன் 11 மற்றும் 12 ஆகிய தேதலிநடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக ஆளும் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது மேலும் குறிப்பாக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Parliament election BJP discussion meeting