பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - 9 மணியில் இருந்து முன்னணி நிலவரம் ! - Seithipunal
Seithipunal



நாடு முழுவதும் இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏழு கட்டங்களாக 543 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம்  தேதி வரை பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் குஜராத் மாநிலத்தி சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் மட்டும் போட்டியின்றி முன்னரே தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டார்.

இதையடுத்து மீதமுள்ள 542 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் நாடு முழுவதும் 8000 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் ஆளும் கட்சியான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசின் இந்தியா கூட்டணிக்கும் தான் நேரடியான போட்டி நிலவுகிறது.

441 தொகுதிகளில் பாஜகவும், 99 தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்டுள்ளன. மேலும் 328 தொகுதிகளில் காங்கிரசும், மீதியுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்டுள்ளன. மேலும் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் சில மாநிலங்களில் கூட்டணியிலும், சில மாநிலங்களில் எதிர் எதிராகவும் போட்டியிட்டுள்ளன. 

இதற்கிடையே ஜூன் 1ம் தேதி வெளியான கருத்துக்கணிப்புகளில் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய வாக்கு எண்ணிக்கையில் காலை 9 மணி முதல் யார் முன்னணியில் உள்ளார் என்ற விவரங்களை தெரிய வரத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament Election Leading Standard Will be Known From 9 AM


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->