நெருங்கி வரும் மக்களவை தேர்தல்: ''வார் ரூம்'' அமைத்த தி.மு.க.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில் மக்களவை தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க தி.மு.க சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி பரப்புரை போன்றவற்றை தி.மு.க இணை அமைப்பு செயலாளர் மேற்கொள்வார். 

தி.மு.க துணை அமைப்புச் செயலாளர் ஆஸ்டின் தலைமையிலான குழு ஊடக விவாத குழு, நட்சத்திர பேச்சுகள் பரப்புரை போன்ற பணிகளை மேற்கொள்ளும். 

தி.மு.க சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி தலைமையிலான குழு, சட்ட குழு மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு 'வார் ரூம்' அமைக்கப்படும் எனவும் தி.மு.க தலைமை தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

parliamentary elections dmk sets up war room


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->