நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: மதிமுக சார்பில் குழு! பொதுச் செயலாளர் வைகோ அதிரடி அறிவிப்பு!
Parliamentary Elections MDMK Committee
நாடாளுமன்ற தேர்தலுக்காக மதிமுக சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு, தேர்தல் அறிக்கை அளிப்பதற்கான தேர்தல் அறிக்கை குழு அமைக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தல் பொருத்தவரை ஒவ்வொரு கட்சியும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் தேர்தல் அறிக்கைக்காகவும் குழு ஒன்றை அமைத்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் மதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அதிமுக இருந்து வருகிறது. இந்த மதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழுவை மதிமுக அறிவித்துள்ளது.
குறிப்பாக மதிமுக அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், மதிமுக பொது பொருளாளர், மதிமுகவின் அரசியல் மைய செயலாளர், தேர்தல் பணி செயலாளர் ஆகிய 4 பேர் அடங்கிய குழு மதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக ராஜேந்திரன் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த குழுவினர் திமுகவுடன் தொகுதி பங்கிடுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கின்றனர்.
English Summary
Parliamentary Elections MDMK Committee