பாஜக, காங்கிரஸ் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் விடுத்த எச்சரிக்கை!
Parliment election ECI letter to Congress BJP Mallikarjuna Kharge JP Nadda
பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் இதுவரை ஐந்து கட்ட வாக்கு பதிவு முடிந்துள்ளது. வருகின்ற 25ஆம் தேதி ஆறாம் கட்ட வாக்கு பதிவும். ஜூன் மாதம் ஒன்றாம் தேதி ஏழாம் கட்ட வாக்கு பதிவும் நடைபெற உள்ளது.
ஜூன் மாதம் மூன்றாம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் மொத்தமாக எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப் படுத்தி உள்ளன. பிரச்சாரத்தின் போது பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் வரம்பை மீறி சில வார்த்தைகளை கூறி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இரு கட்சிகளும் ஒருவரையொருவர் தேர்தல் ஆணையத்தில் மாறி மாறி புகார் அளித்து வரும் நிலையில், இரு கட்சிகளின் தலைவர்களின் பிரச்சாரத்தின் தரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கி உள்ளது.
பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டா மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகா அர்ஜுனா கார்கே ஆகியோருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், "உங்கள் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தலைவர்களின் சொற்பொழிவை சரி செய்ய வேண்டும்.
அவர்களின் பேச்சில் அக்கறையுடனும், ஒழுக்கத்தை பேணுவதற்கும் முறையான அறிவுறுத்தல்களை நீங்கள் வழங்க வேண்டும்.
மத்தியில் ஆளும் கட்சி என்ற முறையில் பாஜக நாட்டின் சமூக கட்டமைப்பை தேர்தல் வழிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விரும்புகிறது.
இந்திய அரசியல் சாசனம் ரத்து செய்யப்பட்டுவிடும், விற்பனை செய்யப்பட்டுவிடும் என்று போன்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று உங்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மேலும் சமூகத்தை பிளவுபடுத்தும் வகையிலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று உங்களின் தலைவர்கள் மற்றும் பேச்சாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மதம், இனம் சார்ந்த பரப்புரைகளை இனி மேற்கொள்ள வேண்டாம். தேர்தல் நடத்தி விதிமுறைகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Parliment election ECI letter to Congress BJP Mallikarjuna Kharge JP Nadda