ஒரே ஒரு வெற்றி டூ எதிர்க்கட்சி தலைவர் - பவன் கல்யாணின் வெற்றிப் பாதை ..!! - Seithipunal
Seithipunal



1996ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் பவன் கல்யாண். இவர் மொத்தமே 25 படங்களில் தான் நடித்துள்ளார். குறிப்பாக இவர் சண்டைக் காட்சிகளில் மெனக்கெட்டு அதிரடியாக நடிப்பதால் தெலுங்கு ரசிகர்கள் இவரை பவர் ஸ்டார் என்று அழைக்கின்றனர். 

இந்நிலையில் பவன் கல்யாண் கடந்த 2014ம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கி இவர் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியைப் போலவே பவன் கல்யாணும் அரசியலில் தோல்வியை தழுவப்போகிறார் என்று பலரும் கூறினார்கள்.

தன் மீதான விமர்சனங்களைக் கண்டுகொள்ளாத பவன் கல்யாணின் ஜனசேனா  கட்சி, 2019ம் ஆண்டு ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. அப்போதும் அனைவராலும் கேலி செய்யப்பட்ட பவன் கல்யாண், இதற்கடுத்து மேலும் சில படங்களில் நடித்து பவர் ஸ்டார் பட்டத்தையும் தக்கவைத்துக் கொண்டார்.

மேலும் தீவிர அரசியலிலும் இறங்கிய இவர், தற்போது நடைபெற்றுள்ள ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்குதேசம் மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளார்.

இதையடுத்து தற்போது கிங் மேக்கராக உருவெடுத்திருக்கும் பவன் கல்யாண், ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pawan Kalyan Victory Journey


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->