பெட்ரோல், டீசல் விலை உயருமா? மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் பீப்பாய் 134.9 டாலராக அதிகரித்துள்ளது. மேலும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு அமெரிக்கா  தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதேபோல் மேற்கத்திய நாடுகளும் தடைவிதிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவிக்கையில்,

"உலகளாவிய விலையால் கச்சா எண்ணெய் தற்போது தீர்மானிக்கப்பட்ட வருகிறது. உலகின் ஒரு பகுதியில் போர் போன்ற சூழல் நிலவும் நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் அதை கண்டிப்பாக கருத்தில் எடுத்துக் கொள்ளும்.

நம் நாட்டு குடிமக்கள் நலனுக்காக நாங்கள் நல்ல முடிவுகளை எடுப்போம். உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் காரணமாக எண்ணெய் விலையை அரசாங்கம் கட்டுப்படுத்தி உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுவது சரியானது கிடையாது.

தற்போதைய நிலையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாது. ஏற்பட வாய்ப்பு இல்லை என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நமது கைகளில் 85% கச்சா எண்ணெய் இறக்குமதி, 50 -55 சதவீதம் எரிவாயு சார்ந்து இருந்தாலும், நமது ஆற்றல் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol diesel rate ukraine russia conflict


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->