கேரளாவுக்கு எதிராக ராகுல், மோடியின் ஒருமித்த குரல்.!! - பினராயி விஜயன் குற்றச்சாட்டு.!! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் கேரளாவில் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன. 

கேரள மாநிலம் பய நாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி பாஜகவையும் கேரளாவையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

அதற்கு பதிலடி கொடுத்திருந்த கேரள மாநிலம் முதல்வர் பினராயி விஜயன் ராகுல் காந்திக்கு என ஒரு பெயர் உள்ளது அதை யாரும் மறக்கவில்லை என கூறி பதிலடி கொடுத்திருந்தார். மேலும் உங்கள் பாட்டி இந்திரா காந்தி ஆட்சி செய்த போது எங்களை எல்லாம் சிறையில் அடைத்தார். 

திரையை கண்ட நாங்கள் அஞ்சப் போவதில்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கேரள மாநிலம் காசர்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பின்னராயி விஜயன் "கேரளாவுக்கு எதிராக பேசும் போது பிரதமர் நரேந்திர மோடியும் ராகுல் காந்தியும் ஒரே குரல் எழுப்புகின்றனர். 

நிதி ஆயோக்கின் பொறுப்பில் இருந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்கிறார். அதேபோன்று சன் பரிவார் அமைப்புகளை நேரடியாக எதிர்க்க ராகுல் காந்தி முயற்சிக்கவில்லை. கேரளாவில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு துளியும் கிடையாது. அதை உணர்ந்து கேரளாவை அவமதித்து பொய்களை கூறி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. 

பாஜகவை தோற்கடிப்பது இடது ஜனநாயக முன்னணியின் நோக்கம். கேரளாவில் ஊழல் பீகார் போன்றது என ஒரே நேரத்தில் இரு மாநிலங்களை மோடி இழிவு படுத்தி உள்ளார். கேரள மாநிலத்தின் சாதனைகளை பொய்களால் மூடி மறைக்க முயல்கிறார்" பிறந்தவர் நரேந்திர மோடி என விமர்சனம் செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pinarayi Vijayan criticized Narendra Modi Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->