அப்படி நெனைக்க வச்சிடாதீங்க.. அது நல்லதல்ல.!! I.N.D.I கூட்டணியில் பூகம்பம்.!! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்று இருந்தாலும் கேரளாவில் காங்கிரஸ் மற்றும் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. கேரள மாநிலம் வயநாட்டில் போட்டு மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக கேரள மாநிலம் முதல்வர் பினராயி விஜயனை ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார். 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பினராயி விஜயன் "பாஜக ஏன் கேரள முதலமைச்சரை கேள்வி கேட்கல, அட்டாக் பண்ணல, ஏன் வழக்கு பதியல, ஏன் காவல்ல எடுக்கலன்னு ராகுல் காந்திக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

ராகுல் காந்தி... உங்களுக்கு முதல்ல ஒரு பேர் இருக்கு அதுல இருந்து இன்னும் நீங்க மாறல போலன்னு நினைக்க வைக்காதீங்க. அது நல்லதல்ல... உங்க பாட்டி இருக்காங்களே.. அவங்க இந்த நாட்டை மொத்தமா அடக்கி ஆண்டு கொண்டு இருந்தப்ப.. அவங்கதான் எங்களை எல்லாம் ஒன்றை வருஷம் சிறையில் அடைச்சாங்க..

அதனால சிறைனா... உங்க அசோக் சவுகான் மாதிரி அய்யய்யோ... அங்கெல்லாம் போக மாட்டேன்னு சொல்றவங்க இல்ல நாங்க.. அப்புறம் கேள்வி கேட்கிறது... கேள்விகளை எதிர்கொள்ளாதவங்க இல்ல நாங்க" என ராகுல் காந்தியை கடுமையாக சாடி பேசி உள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். இதனால் இந்தியா கூட்டணியில் புதிய சர்ச்சை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pinarayi Vijayan response RahulGandhi criticism


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->