பிரதமர் மோடி 421 முறை கோவில்- மசூதி, பிரிவினை பற்றி பேசியுள்ளார் - மல்லிகார்ஜுன கார்கே!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் 421 முறை கோவில் - மசூதி  என பிரிவினையை பற்றி பேசிவுள்ளதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிவுள்ளார்.

மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,இன்று மாலை 6 மணியுடன் மக்களவை தேர்தலுக்கான இறுதி கட்ட தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. ஜூன் 1ம் தேதி மக்களவை 7ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இதனால், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ஜூன் 4ம் தேதி மாற்று அரசை அமைப்பதற்கான அதிகாரத்தை மக்கள் வழங்குவார்கள் என்று நம்புகிறேன். இண்டியா கூட்டணி முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததால் அது ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டுவரும்.

தொடர்ந்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரங்களில் 421 முறை கோவில் - மசூதி என பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். காங்கிரஸ் பெயரை 232 முறையும் அவருடைய பெயரை 758 முறையும் பிரச்சாரத்தில் பயன்படுத்தியுள்ளார். ஆனால், ஒருமுறை கூட வேலைவாய்ப்பின்மையை பற்றி பேசவில்லை என்று கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi has talked about temple and mosque separation 421 times by Mallikarjuna Kharge


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->