வரும் 12ம் தேதி... பிரதமர் மோடியின் பயணம் ரத்து: அதிகாரபூர்வமாக அறிவித்த முதலமைச்சர்.!  - Seithipunal
Seithipunal


வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலமாக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி சற்று முன்பு அறிவித்துள்ளார்.

இன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "வருகின்ற ஜனவரி 12-ஆம் தேதி நடக்க உள்ள தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நேரடியாக கலந்து கொள்வதாக இருந்தது. தற்போது அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி காட்சி மூலமாக கலந்து கொள்ள இருக்கிறார்.

புதுச்சேரியில் 10 பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங்கல் தினத்தை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 10 பொருட்களுடன் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

ரேஷன் கடைகள் மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் ரூபாய் 490 ரூபாய் மதிப்புள்ள இந்த பரிசு தொகுப்பு இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

புதுச்சேரியில் ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் தான் புதுச்சேரிக்கு ஒரு வளர்ச்சியை கொண்டு வர முடியும். இது போன்ற ஒரு நிலை கடந்த காலங்களில் இல்லாத காரணமாக தான் புதுச்சேரியின் நிர்வாகம் சீர்குலைந்து இருந்தது" என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி  தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi program change in puducherru


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->