#BREAKING || பஞ்சாப் - பிரதமர் மோடி விவகாரத்தில் திடீர் திருப்பம்.! சற்றுமுன் வெளியான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நேற்று பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க இருந்த நிகழ்ச்சி, பாதுகாப்பு குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு குறைபாடு குறித்து பஞ்சாப் மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

பிரதமர் மோடி சாலை வழியாக செல்லும் பொழுது போராட்டக்காரர்கள் திடீரென சாலையை மறித்துள்ளனர். இதனால் பிரதமர் மோடி 20 நிமிடம் தனது காரில் காத்திருந்து, பின்னர் பாதுகாப்பாக விமான நிலையத்திற்கு சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று, பாஜக தொண்டர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு ஏற்பட்ட குறைபாடு குறித்து நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மனிந்தர் சிங் முறையீட்டு காரணமாக இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர். மனிந்தர் சிங் அந்த மனுவில், "எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நீதிபதி அவர்கள் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

மனு குறித்த விவரங்களை பஞ்சாப் அரசுக்கு வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi Punjab program issue SUPREME COURT


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->